கலைக்குரிசில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
This Image maybe reused under the public domain தமிழ் திரைப்பட உலகத்தின் பெயரை உலக அளவில் பேச வைத்த ஒரு மாபெரும் நடிகன். நடிப்பதற்காகவே கலைத் தாய் அனுப்பவைத்த ஒரு பிறவி நடிகன். இவர் தமிழனாக பிறந்ததனால் தமிழனுக்கு பெருமை. நடிப்பு தொடர்பாக அற்புதமான திறமைகளை வித்தைகளை உள்ளடக்கிய மகா கலைஞன். இவர் தமிழகத்தின் ஒரு பொக்கிஷம், இன்றும், என்றும் எப்போதும் வரப்போகும் நடிகர்களுக்கும் ஒரு தலைசிறந்த நூலகம். தனது முத்தான நடிப்பினால் காவிய நாயகர்களுக்கும், ஏன் கடவுளுக்குமே உயிர் கொடுத்த பிதாமகன். எத்தனை வேடங்கள், எத்தனை வகை நடிப்பு. நடிப்புலக மேதை, கலைக்குரிசில், நடிகர் திலகத்தின் நினைவு நாள் இன்று. இந்த நாளில் அன்போடு அவரை நினைவு கூர்வோம். அவரின் புகழ் என்றும் மறையாது. வாழ்க..வளர்க..நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் புகழ்.