Posts

Showing posts from July, 2017

கலைக்குரிசில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

Image
This Image maybe reused under the public domain தமிழ் திரைப்பட உலகத்தின் பெயரை உலக அளவில் பேச வைத்த ஒரு மாபெரும் நடிகன். நடிப்பதற்காகவே கலைத் தாய் அனுப்பவைத்த ஒரு பிறவி நடிகன். இவர் தமிழனாக பிறந்ததனால் தமிழனுக்கு பெருமை.  நடிப்பு தொடர்பாக அற்புதமான திறமைகளை வித்தைகளை உள்ளடக்கிய மகா கலைஞன். இவர் தமிழகத்தின் ஒரு பொக்கிஷம், இன்றும், என்றும் எப்போதும் வரப்போகும் நடிகர்களுக்கும் ஒரு தலைசிறந்த நூலகம். தனது முத்தான நடிப்பினால் காவிய நாயகர்களுக்கும், ஏன் கடவுளுக்குமே உயிர் கொடுத்த பிதாமகன். எத்தனை வேடங்கள், எத்தனை வகை நடிப்பு. நடிப்புலக மேதை, கலைக்குரிசில், நடிகர் திலகத்தின் நினைவு நாள் இன்று. இந்த நாளில் அன்போடு அவரை நினைவு கூர்வோம். அவரின் புகழ் என்றும் மறையாது. வாழ்க..வளர்க..நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் புகழ்.

Sivaji

முகத்தை காட்டி நடிக்க தெரியாத நடிகர்கள் மத்தியில் தன் நகத்தை கூட நடிக்க வைத்த உன்னத நடிகனின் நினைவு நாள். நாடகத்தமிழுக்கு சர்வதேச புகழ்பெற்றுகொடுத்த பெரும் கலைஞன் அவர். நவரசம் மட்டுமல்ல ஆய கலைகள் 64க்கும் உருவம் கொடுத்து கண்ணில் நிறுத்திய நடிகன் அவர். 64 கலைகளையும் முகத்திலே காட்டினார். அவரின் காந்த பார்வையும், புன்னகைத்த வசீகர முகமும் எத்தனை எத்தனை மனிதர்களை உணர்வோடு நம் கண்முன் காட்டிற்று, தெய்வத்தின் கருணையினையும் அம்முகமே அப்பழுக்கற்று காட்டியது. எந்த மன்னனும் கொடுக்காத கம்பீரத்தையும் அவன் கொடுத்தான், எந்த மத துறவியும் கொடுக்காத சாந்தமான பாத்திரத்திலும் அவன் ஜொலித்தான், எல்லா மத துறவியாக அப்படியே பொருந்தினான் கொடும் தீவிரவாதி முதல் கடமை தவறா காவல்துறை அதிகாரி வேடம் என அசத்தினான். வழக்கறிஞர் பாத்திரத்திற்கு இன்றுவரை பாரிஸ்டர் ரஜினிகாந்த் ஒரு கனவு அந்த குட்டியானை நடையழகும், சிங்கத்தின் கர்ஜனையுமாய், புலியின் கம்பீரமுமாய் அவர் வலம் வந்த காலங்கள் தமிழ்சினிமாவின் பொற்காலங்கள் அவராலே தான் சிவபெருமான், கர்ணன்,கட்டபொம்மன் முதல் , முதல் மரியாதை கிராமத்து வெகுளி மனிதர் வரை கண்ம

Sivaji Anniversary Post

Image
       இன்றைய சினிமா,, அன்றைய சினிமா ,,, அடடா எவ்வளவு வேறுபாடுகள்,,, மாறுபாடுகள்,,, நான் அன்றைய சினிமா என்று குறிப்பிட விரும்புவது சிவாஜி சினிமாக்களை,,, மற்றவர்கள் சினிமாவும் அதில் கலந்து இருந்தாலும் சிவாஜி சினிமாக்களே தலைவாழை இலைபோட்டு 18 வகை காய்கறிகளோடு அறுசுவை விருந்தளித்தது.,,, அன்றைய சினிமாவில் கூட்டு பொரியல் அவியல் துவையல் வேண்டுமானால் மற்ற நடிகர்களாக இருக்கலாம், மெய்ன் மீல்ஸ் அதற்குரிய சாம்பார், ரசம, புளிக்குழம்பு, மோர்க்குழம்பு, வற்றல் குழம்பு, வடை பாயாசம் அப்பளம், ஊறுகாய், தயிர், மண்ணச்ச நல்லூர் பொன்னி ரைஸ் என்று வெரைட்டியாக இருக்கும் மீல்ஸ் சிவாஜி டிஷ்,,, அதாவது சிவாஜி சினிமாக்கள்,,, ஸோ அற்றை நாளில் இந்த ஒற்றை மனிதன் சினிமாக்களை அன்றைய சினிமா என்ற கணக்கீட்டில் கொண்டு வருகிறேன்,,, இன்றைய சினிமாவில் என்ன என்ன இருக்கிறது? சொல்வதற்கு நிறைய இருக்கிறது,,, காட்சிக்கு காட்சி வன்முறை,,, யதார்த்தம் என்ற பெயரில் வாயோடு வாய் வைத்து அழுத்தும் முத்தக் காட்சிகள், யதார்த்தம் என்ற பெயரில் பெண்களை ஆபாசமாக காட்டுதல், நகைச்சுவை என்ற பெயரில் நேரடி ஆபாச வசனங்கள்,,, டூயட் என்ற பெயரில்